மெட்ரோ ரயில் தரக்கட்டுப்பாடு கூட்டமைப்பு: பிரதமர் மோடி ஒப்புதல்

நாடு முழுவதும் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவைக்கான தரக்கட்டுப்பாடு கூட்டமைப்பு அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.
மெட்ரோ ரயில் தரக்கட்டுப்பாடு கூட்டமைப்பு: பிரதமர் மோடி ஒப்புதல்
Updated on
1 min read

நாடு முழுவதும் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவைக்கான தரக்கட்டுப்பாடு கூட்டமைப்பு அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.

புது தில்லியில் அமைந்திருக்கும் முந்த்கா, பஹதுர்கர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

மெட்ரோ ரயில் சேவை தொடர்பான திட்டங்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ இயக்கத்துக்கு மிகப்பெரிய கட்டமைப்பு தேவை என்பதை கருத்தில் கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியிலான புதுமைகள் தான் புதிய இந்தியாவின் துவக்கம். சாலை, விமானம், கப்பல் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்தையும் மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதில் எவ்வித பாகுபாடும் கிடையாது. 

ஒவ்வொரு இடத்துக்குமான தொடர்பையும் மேம்படுத்தும் விதமான அனைத்து நலத்திட்டங்களும் உரிய நேரத்தில் செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றார்.

பின்னர், இந்தியாவின் 'மெட்ரோ மேன்' என்றழைக்கப்படும் ஐஈஎஸ் அதிகாரி ஈ.ஸ்ரீதரன் என்பவரை மெட்ரோ ரயில் சேவைக்கான தரக்கட்டுப்பாடு கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மோடி நியமித்தார். இவர் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை தில்லி மெட்ரோவின் நிர்வாக இயக்குநராக செயலாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com