கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் நானும், எனது குடும்பத்தினரும் போலீஸாரால் துன்புறுத்தப்பட்டோம் என்று மத்தியப் பிரதேச பாஜக பெண் எம்எல்ஏ நீலம் அபய் மிஸ்ரா குற்றம்சாட்டினார்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அப்போது, ஆளும் கட்சியின் எம்எல்ஏவான நீலம் அபய் மிஸ்ரா கண்ணீருடன் பேசத் தொடங்கினார். அவர் அவையில் கூறியதாவது:
கட்சியின் மூத்த தலைவர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் ரெவா மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எதிராக பொய் வழக்குகளை பதிவு செய்யப்போவதாக மிரட்டுகிறார். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை. எனக்கும், எனது குடும்பத்தினர் போதிய பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும். எனக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நீலம் அபய் மிஸ்ரா தெரிவித்தார்.
அப்போது, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் அவருக்கு ஆதரவாக குரலெழுப்பினர். ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே அரசில் உதவி கிடைக்காமல் இருப்பது போல் உணர்கிறார் என்றால், சாதாரண மக்களின் நிலைமையை நாம் யோசித்து பார்க்க வேண்டும்' என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மிஸ்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அவை நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த மாநில உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங்குக்கு சட்டப் பேரவைத் தலைவர் சீதாசரண் சர்மா உத்தரவிட்டார்.
பூபேந்திர சிங் கூறுகையில், உங்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் நான் விசாரிக்கிறேன்' என்றார்.
அவரது வாக்குறுதிகளை ஏற்காத மிஸ்ரா, அவையின் மையப் பகுதிக்கு வந்து கூச்சலிட்டார். பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 4 பெண் எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவாக களம் இறங்கினர். தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவையை 15 நிமிடங்களுக்கு அவைத் தலைவர் ஒத்தி வைத்தார்.
மீண்டும் அவை நடவடிக்கை தொடங்கியவுடன் பெண் எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர்.
கட்சியின் பெண் எம்எல்ஏ ஒருவர் கண்ணீர் சிந்துவது ஆளும் கட்சிக்கே அவமானம்' என்றார் காங்கிரஸ் எம்எல்ஏ ராம்நிவாஸ் ராவத்.
அப்போது, பாஜக பெண் எல்எல்ஏக்களான ரஞ்சனா பாஹல், மம்தா மீனா ஆகியோர் வேறு விவகாரத்தை அவையில் எழுப்பினர். அத்துடன், அவை அலுவல்கள் முடித்து வைக்கப்பட்டன. புதன்கிழமை அவை மீண்டும் கூடுகிறது. மிஸ்ராவின் புகார் ஆளும் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


