தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மோகன் பாகவத்துடன் யோகி சந்திப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், அந்த அமைப்பின் செயல் தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லியில் செவ்வாய்க்கிழமை

Updated On :27 ஜூன் 2018, 3:09 am IST

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், அந்த அமைப்பின் செயல் தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோரை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று கடந்த திங்கள்கிழமை யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அயோத்திக்கு செவ்வாய்க்கிழமை வந்த மத்திய அமைச்சர் உமா பாரதி, இந்த விவகாரத்தில் அமைதி காக்க மாட்டேன் என்றும் கூடிய விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.