போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியா, சீனாவை நாங்கள் ஏமாற்றுவதில்லை

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் சுமூக உறவை பேணி காக்கவே நேபாளம் விரும்புகிறது. குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் சுமூக உறவை பேணி காக்கவே நேபாளம் விரும்புகிறது. குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நேபாளப் பிரதமர் சர்மா ஓலி  தெரிவித்தார்.
ஆறு நாள் பயணமாக சீனா சென்றுவிட்டு நாடு திரும்பிய அவர், அந்தப் பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பேசியபோது இவ்வாறு கூறினார்.
மேலும், இந்தப் பயணத்தின்போது சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் சர்மா ஓலி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக, அவர் மேலும் பேசியதாவது: சீனாவுடன் நாம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் யாவும், வளர்ச்சி மற்றும் வளம் குறித்து நாம் கொண்டுள்ள பொது இலக்கை பிரதிபலிப்பவை. இந்த இலக்கை அடைவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக சீனாவும் உறுதி அளித்திருக்கிறது.
இந்தியா மற்றும் சீனாவுடன் சுமூக உறவை கடைப்பிடிப்பதன் மூலமாக மட்டுமே, நேபாளத்தின் வளர்ச்சியும், வளமும் உறுதி செய்யப்படும் என்பதில் அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. குறுகியகால அரசியல் ஆதாயங்களுக்காக நாம் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதில்லை. சுக, துக்க நேரங்களில் நாம் அண்டை நாடுகளுடன் துணை நின்று வருகிறோம்.
நமது வெளிநாட்டு மற்றும் சர்வதேச கொள்கைகள் அனைத்தும் நேர்மையான நோக்கங்களுடன் வகுக்கப்படுகிறது. இதனால், நமது நாட்டுப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.