கேரளத்தில் நச்சு ரசாயனத்தில் பதப்படுத்தப்பட்ட 9,600 கிலோ மீன்களை மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பிணவறைகளில் சடலங்களைப் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஃபார்மலின்' என்ற நச்சுத் தன்மை கொண்ட ரசாயனத்தை, மீன், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த ரசாயனம் மூலம் பதப்படுத்தப்படும் உணவுப் பொருள்களை உண்பது உடல் நலனுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.
இந்நிலையில், பிற மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு வரும் மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்காக அந்த மாநில உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆபரேஷன் சாகர் ராணி' என்ற பெயரில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இரு வாகனங்களில் எடுத்து வரப்பட்ட மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, 7,000 கிலோ இறால்கள், 2600 கிலோ இதர வகைகள் என மொத்தம் 9,600 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுவரை அந்த மாநிலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் மொத்தம் 21,600 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மீன்களில் ரசாயன கலப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கேயே மீன் உணவுகள் சமைத்து, அக்கம் பக்கம் இருந்தவர்களுக்கு இலவசமாக கொடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விதிமீறல்: 3 கடைகளுக்கு ‘சீல்’
தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

பழனி அருகே 2.750 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இளைஞா்! கஞ்சா கடத்தியவா் கைது!

போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


