மத்திய அரசு பணியாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றும்போது வழங்கப்படும் மிகை ஊதியத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகை ஊதியம் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்து வழங்கி வருவதால், மிகை ஊதியத்தை ரத்து செய்யலாம் என்ற 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய செலவினங்கள் துறை விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து அமைச்சகம், துறைகள் மற்றும் சார்பு அலுவலகங்களிலும் இந்த ஊதிய ரத்து நடவடிக்கையை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தொழிற்சாலை பணியாளர்கள் என வரையறைக்குள் வரும் பணியாளர்களை பட்டியலிடுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலை ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகை ஊதிய முறையை பயோமெட்ரிக் வருகைப்பதிவுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மிகை ஊதியத்தின் அளவை, மூத்த அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கும் முந்தைய முடிவில் எவ்வித மாற்றமும் செய்வதில்லை என அரசு முடிவெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

மேக்கேதாட்டு அணை; கன்னட அமைப்பினர் போராட்டம்: தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கம்!

இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


