கேரளாவில் காணாமல் போன 11 பேரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்க வாய்ப்புள்ளதாக கேரள காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் இருந்து ஜூன் 15-ஆம் தேதி இரு வேறு குடும்பத்தில் இருந்து 11 பேர் திடீரென மாயமாகினர். இதில் சிறுவர்களும் அடங்கும்.
இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்கலாம் எனவும், இதற்காக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டுக்கு பயணித்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து சிலர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களும் அப்போது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்திருக்கக்கூடும் என்று கேரள காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


