மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸ் அலுவலகத்தில் ஹோலி கொண்டாட்டம்

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகையிலாவது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நல்ல புத்தியை வழங்க இறைவனை தில்லிவாழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய

News image
தில்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹோலி கொண்டாட்டம்.
Updated On :1 மார்ச் 2018, 7:47 pm

DIN

வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகையிலாவது பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் நல்ல புத்தியை வழங்க இறைவனை தில்லிவாழ் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார். 
தில்லி காங்கிரஸ் உத்தராஞ்சல் பிரிவின் சார்பில் தில்லியில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் ஹோலிப் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
இக்கொண்டாட்டத்தில் பூர்வாஞ்சல் பிரிவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகாபல் மிஸ்ரா, சிவாஜி சிங், பி.கே.மிஸ்ரா உள்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் பேசியதாவது: 
தில்லியை ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக அரசுகளின் நிர்வாகக் குளறுபடிகளாலும் அவர்கள் கடைப்பிடிக்கும் மோதல் போக்காலும் தில்லி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 
வசந்த காலத்தை வரவேற்கும் ஹோலிப் பண்டிகையைக் கூட மன நிறைவுடன் அவர்களால் கொண்டாட முடியவில்லை. ஆம் ஆத்மி அரசுக்கும் பாஜகவுக்கும் நடைபெறும் ஈகோ யுத்தம் மக்களை சலிப்படைய வைத்துள்ளது. 
சீலிங் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களால் எவ்வாறு மனநிறைவுடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாட முடியும்? இந்தப் பண்டிகை நாளில் மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கும் நல்ல புத்தியை இறைவன் வழங்க வேண்டும் என நாம்அனைவரும் பிரார்திக்க வேண்டும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.