காஷ்மீரில் பனிச்சரிவு: இளைஞர் பலி

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர். இந்த மீட்புப் பணிகளின்போது, கடந்த மாதம் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
பந்திபோரா மாவட்டத்தின் ஹசாங்கம்-மலங்கம் பகுதியில் புதன்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் சிக்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினரும் போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் அப்துல் அஜீஸ் என்பவரது உடல் மீட்கப்பட்டது. மேலும் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காணாமல்போன மற்றொருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி இப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களது உடல்கள் விசாரணைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com