திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பிஎன்பி மோசடி: மெஹுல் சோக்ஸியின் ரூ.1,217 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.12,000 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு

News image
அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்ஸியின் சொத்துகள்.
Updated On :1 மார்ச் 2018, 7:52 pm

DIN

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.12,000 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,217 கோடி மதிப்புள்ள 41 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் அதிகாரிகள் துணையுடன் சுமார் ரூ.12,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக, வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது தொழில்பங்குதாரரும் உறவினருமான மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராக சிபிஐ இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சோக்ஸி மற்றும் அவரது கீதாஞ்சலி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.1,217 கோடி மதிப்பிலான பல்வேறு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
மும்பையில் உள்ள 15 வீடுகள் மற்றும் 17 அலுவலக வளாகங்கள், மகாராஷ்டிர மாநிலம், அலிபாக்கில் உள்ள பண்ணை வீடு, கொல்கத்தாவில் உள்ள வணிக வளாகம், ஹைதராபாதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 170 ஏக்கர் பூங்கா நிலம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தமிழகத்தின் விழுப்புரம், மகாராஷ்டிரத்தின் நாசிக், நாகபுரி ஆகிய இடங்களில் உள்ள நிலங்களும் முடக்கப்பட்டன. மொத்தம் 441 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,217 கோடி என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நீரவ் மோடி மற்றும் அவரது குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.523 கோடி மதிப்புள்ள 21 சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த வாரம் முடக்கியது. மேலும், நீரவ் மோடி, சோக்ஸிக்கு சொந்தமான 198 இடங்களில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி நகைகள், இதர மதிப்புமிக்க கற்கள் என ரூ.5,100 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர இருவருக்கும் சொந்தமான ரூ.124 கோடி மதிப்புள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.