மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வங்கதேசத்தில் அணுமின் நிலையம்: இந்தியா - ரஷியா கூட்டு முயற்சியில் அமைகிறது

வங்கதேசத்தின் ரூப்பூர் பகுதியில் அமையவுள்ள புதிய அணுமின் நிலையத்தின் கட்டமைப்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில்

News image
Updated On :1 மார்ச் 2018, 8:50 pm

DIN

வங்கதேசத்தின் ரூப்பூர் பகுதியில் அமையவுள்ள புதிய அணுமின் நிலையத்தின் கட்டமைப்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா, ரஷியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மூன்று நாடுகளின் ஒத்துழைப்புடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், ரஷியாவின் பங்களிப்புதான் அதில் அதிக அளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அமையப்போகும் முதல் அணுமின் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உடன்படிக்கை ரஷியாவின் மாஸ்கோ நகரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் தரப்பில் அந்நாட்டுக்கான தூதரக அதிகாரி பங்கஜ் சரண் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ரூப்பூரில் 2,400 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தலா 1,200 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகளை அங்கு நிறுவவும் திட்டமிட்டது.
அந்த உலைகளை ரஷியா அமைக்க உள்ளது. அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராகாததால் வேறொரு நாட்டில் நேரடியாக அணுமின் உற்பத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு சர்வதேச விதிகளில் இடமில்லை. அதேவேளையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அணுமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அணு உலைகளை நிறுவும் பணிகளை இந்தியா மேற்கொள்ள முடியும். அதன் அடிப்படையில், மூன்று நாடுகளிடையே உடன்படிக்கை கையெழுத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.