தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மேகாலய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்பு

மேகாலயத்தின் முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

News image
Updated On :6 மார்ச் 2018, 7:08 am


ஷில்லாங்: மேகாலயாத்தின் முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மேகாலயாத்தின் முதல்வர் கான்ராட் சங்மாவுடன் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஷில்லாங்கில் நடைபெற்ற இவ்விழாவில், பாஜக தேசியச் செயலர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேகாலயத்தில் ஆட்சியமைக்கும்படி தேசிய மக்கள் கட்சி (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மாவுக்கு ஆளுநர் கங்கா பிரசாத் நேற்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மேகாலயத்தில் கான்ராட் சங்மா தலைமையில் புதிய அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது.

மேகாலய மாநில சட்டப் பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 19 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக முன்னணி (யூடிபி) 4 தொகுதிகளிலும், பாஜக, மலைப்பகுதி மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் வென்றன. சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் தங்களை முதலில் ஆட்சியமைக்கும்படி அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் வலியுறுத்தியது.

அதேபோல், காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து என்பிபி தலைமையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டது. இதுதொடர்பாக பிற சிறிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, என்பிபி கட்சித் தலைமையில் கூட்டணி அரசு அமைக்க சிறிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

இதனால், ஆளுநர் கங்கா பிரசாத்தை என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சந்தித்து, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறுகையில், 'என்பிபி 19 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 6, மக்கள் ஜனநாயக முன்னணி 4, மலைப்பகுதி மக்கள் கட்சி 2, பாஜக 2, சுயேச்சை 1 ஆகிய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

இதுபோல், காங்கிரஸ் கட்சியும், என்பிபி கட்சியும் பரஸ்பரம் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்து கோரிக்கைகள் விடுத்தன. இதனால், மேகாலயத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கப் போகிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், என்பிபி தலைவர் கான்ராட் சங்மாவை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் கங்கா பிரசாத் திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.