பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மோசடி பட்டியலால் போர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து தலைமறைவான வைர வியாபாரி நீரவ் மோடியின் பெயர் இந்து ஆண்டுக்கான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2018, 11:58 am


புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து தலைமறைவான வைர வியாபாரி நீரவ் மோடியின் பெயர் இந்து ஆண்டுக்கான போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 1.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரராக போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். 

இது குறித்து போர்ப்ஸ் கூறுகையில், இந்தியாவின் நீரவ் மோடி மற்றும் பபா ஜான்ஸ் பிட்சா நிர்வாகி ஜான் ஸ்னேட்டர் உள்ளிட்ட 4 பேர் இந்த ஆண்டுக்கான உலகப் பணக்காரர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் அதிகமானோர்  இடம்பெற்றுள்ளனர். 119 இந்திய கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 18 பேர் அதிகமாக இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.