சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

வாபஸ் ஆகிறதா 2000 ரூபாய் நோட்டு?: மத்திய அரசு பதில்! 

தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2018, 8:22 pm IST

புதுதில்லி: தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது குறித்து மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  

இந்நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு தடை செய்யுமா அல்லது புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற்று விடுமா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது தடை செய்யும் எண்ணமோ இல்லை.

அதேசமயம் கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட முக்கியமான 5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் கரன்சிகளை புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளோம்.  ஆனால் இது எப்போது புழக்கத்தில் விடப்படும் என்று ற முடியாது.

இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.