அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

அடிபட்டுக் கிடந்த மூதாட்டியைக் கண்டு கொள்ளாமல் சென்ற பொதுமக்கள்: மரித்துப் போன மனிதநேயம்! (விடியோ) 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த மூதாட்டியை அப்பகுதியில் செல்வோர் யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 6:05 pm IST

திருவனந்தபுரம்:    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் வாகனத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த மூதாட்டியை அப்பகுதியில் செல்வோர் யாரும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது கடக்காவூர் என்னும் பகுதி. இங்கு உள்ள சாலை ஒன்றில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் செல்லும் பொழுது மோட்டார் சைக்கிள்  மோதியதில் படுகாயங்களுடன் சாலையில் நடுவில் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார்.

ஆனால் அவரைக் காப்பாற்ற அங்கிருந்த யாரும் முன்வரவில்லை. அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் அந்த மூதாட்டியை காப்பாற்றாமல், வெறுமனே வேடிக்கைப் பார்த்துவிட்டு கடந்து சென்று கொண்டிருந்தனர்.

இறுதியில் அவ்வழியாகச் சென்ற இளைஞர் ஒருவர் மூதாட்டியை காப்பாற்ற முன்வந்தார். அந்தச் சமயத்தில் சரியாக காவல் துறை வாகனம் ஒன்று வந்தது. உடனடியாக மூதாட்டி அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

துளியும் மனிதநேயம் இன்றி அப்பகுதி மக்கள் நடந்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.