மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியானதற்கு பொறுப்பேற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
முக்கியத்துவம் வாய்ந்த 10 ஆம் வகுப்பு கணிதப் பாடம் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் ஆகியவை முன்னதாகவே கசிந்துள்ளன. இதற்குப் பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சராக உள்ள பிரகாஷ் ஜாவடேகரும், சிபிஎஸ்ஐ தலைவரும் அனிதா கர்வாலும் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
துரதிருஷ்டவசமானது - ஜாவடேகர் விளக்கம்: இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் ஜாவடேகர் கூறியதாவது:
சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக போலீஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சிபிஎஸ்ஐ தனிப்பட்ட முறையில் விசாரித்து வருகிறது. இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாகும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம்.
இந்தத் தவறால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எவ்வளவு ஆதங்கமும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். தேர்வுகளை எவ்வித முறைகேடும் நடைபெறாத வகையில் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். தொழில்நுட்பம் மேம்பட்டுள்ள இக்காலத்தில் பல்வேறு தேர்வுகளும் பல புதிய சவால்களை சந்தித்து வருகின்றன. எனினும், எந்த வகையிலும் முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் நியாயமான வழியில் தேர்வுகளை நடத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார். 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மறு தேர்வு தேதி வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் அவர்.
முன்னதாக, வினாத்தாள் கசிந்து விட்டதாக வெளியான தகவலையடுத்து, 10ஆம் வகுப்பு கணித பாடம், 12ஆம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகியவற்றுக்கு மறு தேர்வு நடத்தப்படும் சிபிஎஸ்இ புதன்கிழமை தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணையையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தப் பிரச்னையை மையமாக வைத்து தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பள்ளி மாணவ, மாணவியர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது, இதுபோன்ற தேர்வு முறைகேடுகளால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், சிபிஎஸ்இ-யை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

நியூசிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்; சமனில் ஒருநாள் தொடர்!

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு அறிமுக வீரர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

