மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற்றது. பின்னர் 2-ஆம் கட்டமாக மார்ச் 5-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரின் போது பெரும்பாலான நேரம் எதிர்கட்சிகளால் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. எதிர்கட்சியான காங்கிரஸ் கறுப்புப் பண மீட்பு நடவடிக்கை. ஃபேஸ்புக் தகவல் திருட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விலையேற்றம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரத்தால் ஏற்பட்டுள்ள நிலை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டது.
அதுபோல காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அஇஅதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அவையை முடக்கினர். அதுபோல ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களும் இதே காரணத்துக்காக தொடர் அமளியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் இவ்விரு கட்சிகளும் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்த சூழலால் இதன்மீதான தீர்மானம் கொண்டு வருவதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளது. இதற்கிடையில் நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியதால் எவ்வித விவாதகங்ளுமின்றி இது நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை தினங்கள் தவிர்த்து நாடாளுமன்றத்தின் அலுவல் நாட்கள் வெறும் நிமிடங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் பின்வருமாறு:
- மார்ச் 16-ஆம் தேதி - (12.05 முதல் 12.06 வரை) ஒரு நிமிடம்
- மார்ச் 19-ஆம் தேதி - (12.06 முதல் 12.08 வரை) இரண்டு நிமிடங்கள்
- மார்ச் 20-ஆம் தேதி - (12.13 முதல் 12.14 வரை) ஒரு நிமிடம்
- மார்ச் 21-ஆம் தேதி - (12.05 முதல் 12.07 வரை) இரண்டு நிமிடங்கள்
- மார்ச் 22-ஆம் தேதி - (12.06 முதல் 12.08 வரை) இரண்டு நிமிடங்கள்
- மார்ச் 23-ஆம் தேதி - (12.06 முதல் 12.09 வரை) மூன்று நிமிடங்கள்
- மார்ச் 27-ஆம் தேதி - (12.07 முதல் 12.09 வரை) இரண்டு நிமிடங்கள்
- மார்ச் 28-ஆம் தேதி - (12.08 முதல் 12.11 வரை) மூன்று நிமிடங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


