மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தன் தந்தையும், பாஜக அதிருப்தி தலைவருமான யஷ்வந்த் சின்ஹா சந்தித்தது குறித்த கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மறுத்துவிட்டார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் அண்மைக் காலமாக பாஜக தலைமை மீதும், மோடி மீதும் அதிருப்தியில் உள்ளார். அவ்வப்போது மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்.
இதனிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை யஷ்வந்த் சின்ஹாவும், பாஜகவின் மற்ற அதிருப்தி தலைவர்களான சத்ருகன் சின்ஹா, அருண் சௌரி ஆகியோரும் சந்தித்தனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியை தன் தந்தை யஷ்வந்த் சின்ஹா சந்தித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா நேரடியாக பதில் கூற மறுத்துவிட்டார். அவரிடம் இந்த விவகாரம் குறித்து ராஞ்சியில் செய்தியாளர்கள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு 'என் தந்தைக்கான கேள்வியை அவரிடமும், எனக்கான கேள்வியை என்னிடமும் கேளுங்கள். தனது கருத்துகளைக் கூற அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது' என்று அவர் பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 'கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. நாம் (எம்.பி.க்கள்) பல்வேறு தொலைதூரப் பகுதிகளில் இருந்து நாட்டுக்குச் சேவையாற்ற வந்துள்ளோம். இந்தச் சூழலில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்குவது வருத்தமளிக்கிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்நாடகத்தில் எச்5என்1 வைரஸ் தொற்றால் 44 மயில்கள் இறந்தன!

நான் ஒரு பம்பரம் சாம்பியன்: சஞ்சு சாம்சன்

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

