ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றதை அடுத்து, மூன்று நாள்களுக்கு பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பியது.
பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை ஏற்பட்டது. அதில், பொதுமக்களில் 6 பேரும், பயங்கரவாதிகள் 8 பேரும் உயிரிழந்தனர்.
இதை கண்டித்து 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட முன்வருமாறு பிரிவினைவாதிகள் சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபரூக், முகமது யாசின் மாலிக் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால், ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பிரிவினைவாதிகள் அறிவித்தனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 'பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். அதேநேரம், அனைத்து கடைகளிலும், இல்லங்களிலும் கருப்பு கொடி ஏற்றி வைக்கப்பட வேண்டும். கைகளில் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 3 தினங்களாக கல்லூரிகள், பள்ளிகள், கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஒரு சில பள்ளி, கல்லூரிகள் மட்டும் புதன்கிழமை செயல்பட்டன. புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சினிமாவில் கிடைக்காத அங்கீகாரம் சின்ன திரையில் கிடைத்தது! சந்தோஷ் பிரதாப் நெகிழ்ச்சி

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் கதையை இயக்கும் ராம் கோபால் வர்மா!

திமுக - பாஜக கூட்டணி உருவாகிறதா? வானதி சீனிவாசன் பதில்

டைம் டிராவலிங் முயற்சி வெற்றியா! 4413-ம் ஆண்டில் வானில் கார்கள், சாலை முழுக்க ரோபோக்களா?
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


