குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

பிரிவு உபசார விழா அழைப்பை நிராகரித்தார் நீதிபதி செலமேஸ்வர்

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெற இருக்கும் மூத்த நீதிபதி செலமேஸ்வர், தனக்கு பிரிவு உபசார விழா நடத்துவது தொடர்பாக அனுப்பப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டார்.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெற இருக்கும் மூத்த நீதிபதி செலமேஸ்வர், தனக்கு பிரிவு உபசார விழா நடத்துவது தொடர்பாக அனுப்பப்பட்ட அழைப்பை நிராகரித்து விட்டார்.
உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான செலமேஸ்வர், பிற மூத்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோருடன் சேர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை விமர்சித்து செய்தியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் பேட்டியளித்தார். இதனால் அவர் சர்ச்சைக்கு ஆளானார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விரைவில் ஓய்வு பெற இருக்கும் செலமேஸ்வருக்கு வரும் 18ஆம் தேதி பிரிவு உபசார விழா நடத்துவது தொடர்பான அழைப்பை உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் அனுப்பியது. இதை செலமேஸ்வர் நிராகரித்து விட்டார்.
இதுகுறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பிரிவு உபசார விழா அழைப்பை செலமேஸ்வர் நிராகரித்து விட்டார். இருப்பினும், அந்த அழைப்பை ஏற்க வேண்டும் என்று செலமேஸ்வரை சந்தித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மீண்டும் வலியுறுத்தினர். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த அழைப்பை ஏற்க முடியாது என செலமேஸ்வர் தெரிவித்து விட்டார். இதற்கு முன்பு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், பிரிவு உபசார விழா அழைப்பை தாம் ஏற்கவில்லை என்றும் செலமேஸ்வர் தெரிவித்தார்' என்றார்.
உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் விக்ராந்த் யாதவ் கூறுகையில், 'வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்களை செலமேஸ்வர் தனது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர்களுடன் குறிப்பிட்ட நேரம் அவர் பேசிக் கொண்டிருந்தார். எனினும், பிரிவு உபசார விழா அழைப்பை ஏற்கவில்லை' என்றார்.
உச்ச நீதிமன்ற பணியிலும் நீதிபதி செலமேஸ்வர் புதன்கிழமை கலந்து கொள்ளவில்லை. வாரந்தோறும் புதன்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரேனும் ஒருவர் தங்களின் வீட்டில் தயாரிக்கப்படும் உணவை எடுத்து வந்து, சக நீதிபதிகளுக்கு விருந்து அளித்து உபசரிப்பது வழக்கம். இந்த விருந்திலும், நீதிபதி செலமேஸ்வர் தொடர்ந்து 3ஆவது வாரமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.