கொச்சி: வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் போனில் பேசுவது குற்றம் அல்ல என்று கேரள உயர் நீதிமன்றத்தின் அமர்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 16 அன்று அதிவேகமாக கார் ஒட்டியதாகவும், வாகனம் ஓட்டும் பொழுது மொபைல் போனில் பேசியதாகவும், கேரள காவல்துறை சட்டப் பிரிவு 118 (e ) -ன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சட்டப் பிரிவானது பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவோ அல்லது பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலோ தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கு தணடனை அளிப்பதை வலியுறுத்துகிறது.
ஆனால் தன் மீது குறிப்பிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும், வாகனம் ஓட்டும் பொழுது மொபைல் போனில் பேசுவது என்பதை இந்த சட்டப்பிரிவுகளின் கீழ்வராது என்று கூறியும் சந்தோஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி ஒருவர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி நீதிபதிகள் ஷபீக் மற்றும் சோமராஜன் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் போனில் பேசுவது என்பது பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவோ அல்லது பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலோ உள்ள செயல் என்பதற்கான தெளிவான சட்ட உள் பிரிவுகள் எதுவும், கேரள காவல்துறை சட்டப் பிரிவு 118 (e ) -இல் இல்லை . எனவே சந்தோஷ் மீது வழக்கு தொடர்வது என்பது இயலாத செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

