பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்களுடன் கமல் சந்திப்பு 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை பெங்களூருவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புதனன்று சந்தித்துப்  பேசினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:07 pm

DIN

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை பெங்களூருவில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புதனன்று சந்தித்துப்  பேசினார்.

கர்நாடக மாநில முதல்வராக மத்சசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி பங்கேற்கும் பதவியேற்பு விழா பெங்களூருவில் புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க பல முக்கியத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர் குமாரசாமிக்கும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள பரமேஸ்வரா ஆகியோருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையம் சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் பேசினார்.

அதேபோல இந்த விழாவுக்கு என வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா, ஆகியோரையும் சந்தித்து அவர் கலந்துரையாடினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.