ஏழுமலையானை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி குடும்பத்துடன் வழிபட்டார்.
ஏழுமலையானை வழிபடுவதற்காக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை மாலை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். தரிசனம் முடித்து ஏழுமலையான் பிரசாதம் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
ஏழுமலையான் தரிசனம் சிறப்பாக அமைந்தது. 3ஆவது முறையாக ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலைக்கு வருகிறேன். தேவஸ்தான அதிகாரிகள் நல்ல முறையில் தரிசன வசதி செய்தளித்தனர். உலகத்தில் உள்ள அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து கேட்கிறீர்கள். அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அதற்குத் தீர்வு காண நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் உள்ளிட்டவை உள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? - பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பு!

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்







