ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ரயில்வேத்துறையின் மேம்பாடு குறித்த நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
ரயில்வே சேவையின் தரத்தை உயர்த்தவும், அனைத்து ரயில் நிலையங்களிலும் சரியான நேரத்தில் ரயில்கள் செல்வது தொடர்பாகவும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ரயில்வேத்துறை தொடர்பாக மேலும் பல திட்டங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்திய ரயில்வேத்துறையின் முழுத் திறனையும் சரியாக வெளிப்படுத்துவது தொடர்பாகவும், பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதிக பயன்பாடுக்கு உட்பட்ட ரயில் சேவைகளின் இருக்கை வசதியை அதிகரிக்கவும், கூடுதல் மின்சார வசதி ஏற்படுத்தி ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாடு அளவை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


