சென்னை: முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை பொதுமக்கள் ரத்து செய்வதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில்வே அடைந்த லாபம் எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.2,670 கோடி மட்டுமே.
இதில் தெற்கு ரயில்வேயின் லாபம் மட்டும் ரூ.314.94 கோடி.
விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யம் பயணிகள் 24 மணி நேரத்தில் டிக்கெட்டை எந்த அபராதத் தொகையும் இல்லாமல் ரத்து செய்ய அனுமதிக்கலாமா என்று விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வரும் நிலையில், ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு, அபராதத் தொகை மிகப்பெரிய இழப்பாக உள்ளது.
எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ரயிவே கடந்த ஏப்ரல் 2017 - மார்ச் 2018ம் கால கட்டத்தில் மட்டும் ரூ.1,357 கோடியை டிக்கெட் ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யும் அபராதத் தொகையில் இருந்து லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் இது ரூ.1,303 கோடியாக இருந்துள்ளது.

ரயில்வே டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யும் அபராதத் தொகையை கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தியது. அது முதல், இந்திய ரயில்வேயின் லாபம் உயர்ந்து வருகிறது.
இது குறித்து தஞ்சையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் கூறுகையில், சென்னை - தஞ்சாவூர் இடையே பயணிக்க ஜூலை 1ம் தேதி உழவன் ரயிலில் 2 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். ஆனால், அந்த திட்டத்தை மறுநாளே மாற்றிக் கெண்டு டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டேன். இரண்டு டிக்கெட்டுகளின் விலை ரூ.450 (ஒரு டிக்கெட் ரூ.225). டிக்கெட்டுகளை ரத்து செய்த பிறகு எனக்கு கிடைத்தது ரூ.210 மட்டுமே. 50 சதவீதத்தை விட அதிகத் தொகையை ரயில்வே அபராதமாகப் பிடித்துக் கொண்டது என்கிறார்.

அதாவது, படுக்கை வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது அபராதமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.120ம், 3வது ஏசி பெட்டிகளுக்கான டிக்கெட்டை ரத்து செய்யும் போது ஒரு டிக்கெட்டுக்கு ரூ.180ம், 2வது ஏசி பெட்டி என்றால் ரூ.200 மற்றும் முதல் ஏசி பெட்டிக்கு ரூ.240ம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதில் காத்திருப்பு டிக்கெட் எடுத்து அதனை ரத்து செய்தால் அதற்கும் ரூ.60ஐ பிடித்தம் செய்து கொள்கிறது.
இது பற்றி ரயில்வே கூறுவது என்னவென்றால், டிக்கெட்டை ரத்து செய்யும் போது அபராதம் பிடிப்பதால், சில முறைகேடுகள் தவிர்க்கப்படும். ஒரு சிலர் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்வது போன்றவை தவிர்க்கப்பட்டு, அனைத்து பயணிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.

இது குறித்து திருநின்றவூர் நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் மோகன்ராம் கூறுகையில், டிக்கெட்டை முன்பதிவு செய்து 2 அல்லது 3 நாட்களுக்குள் அபராதத் தொகை இல்லாமல் அல்லது குறைந்த அபராதத் தொகையுடன் ரத்து செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி பிரியம்வதா விஸ்வநாதன் கூறுகையில், மற்ற போக்குவரத்துச் சேவைகளைப் போல, குறைவான பயணிகள் இருக்கிறார்கள் என்று கூறி ரயில்களை ரத்து செய்ய முடியாது. ஆண்டு தோறும் அனைத்து ரயில்களும் முழு பயணிகள் எண்ணிக்கையில் இயக்கப்பட்டாலும் கூட, ரயில்கள் இயக்கியதற்கான செலவில் 60% தொகையை மட்டுமே டிக்கெட் கட்டணமாக வசூலிக்க முடியும் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


