கேரளா: செங்கனூர் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி
கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சஜி செரியன் வெற்றி பெற்றுள்ளார்.


கேரள மாநிலம் செங்கனூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சஜி செரியன் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் செங்கனூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு கடந்த 28ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 74.60 சதவீத வாக்குகள் பதிவானது. கன மழை பெய்த நிலையிலும் 1.99 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
கடந்த 2016 சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் இங்கு 74.36 சதவீத வாக்குகளே பதிவானது. இத்தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ கே.கே. ராமச்சந்திரன் நாயர் கடந்த ஜனவரி மாதம் இறந்ததால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸும், கேரளத்தில் காலுன்ற முயற்சித்து வரும் பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியிருந்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அதில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சஜி செரியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...