புது தில்லி: பாஜகவைத் தோற்கடிப்பதற்காக ஒன்றிணைகிறோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வியாழனன்று தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தார்.
சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது
இந்தச் சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. ஜனநாயகத்தைக் காக்கவும், இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்களின் மாண்புகளைக் காக்கவும் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்காக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்.
எங்களது பேச்சில் நாங்கள் நிகழ் காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டும் குறித்துப் பேசினோம். பாஜகவைத் தோற்கடிப்பதையும், ஜனநாயகத்தை பாதுகாப்பதையும் எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
பத்திரிகையாளர்களான உங்களுக்கு வேண்டுமானால் பரபரப்பு செய்திகள் தேவைப்படலாம். ஆனால் எங்கள்முன் உள்ள சவால்களைச் சந்தித்து வெற்றி காண்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
அதேசமயம் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
நாட்டைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும் நாங்கள் ஒன்று சேர்க்கிறோம். பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்று சேர்க்கும் பொதுத் தளமாக இதனைக் கருதுகிறோம். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இது தொடர்பாக திமுக தலைவரான ஸ்டாலினுடன் பேச உள்ளோம். அவர்களும் எங்களுடன் இணைவார்கள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


