டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மத்தியப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர் மரணம்

மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தின் ராஜ்புர் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான தேவிசிங் படேல்(66) மாரடைப்பால் திங்கள்கிழமை மரணமடைந்தார்.

Updated On :6 நவம்பர் 2018, 12:59 am IST


மத்தியப் பிரதேச மாநிலம், பர்வானி மாவட்டத்தின் ராஜ்புர் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில முன்னாள் அமைச்சருமான தேவிசிங் படேல்(66) மாரடைப்பால் திங்கள்கிழமை மரணமடைந்தார்.
இது குறித்து, மாநில பாஜக நிர்வாக உறுப்பினரும், படேலின் நெருங்கிய நண்பருமான ஓம் சோனி கூறியதாவது:
சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தேவிசிங் படேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று அவர் தெரிவித்தார். படேல், முன்னாள் முதல்வர் உமா பாரதி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். 
கடந்த 1990-ஆம் ஆண்டு, முதன் முதலாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட படேல், பின்னர் 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், ராஜ்புர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பாலா பச்சனிடம் தோல்வியடைந்தார். 
வரும் 28-ஆம் தேதி, மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், ராஜ்புர் தொகுதியில் படேல் மீண்டும் போட்டியிடுவார் என்று கடந்த 2-ஆம் தேதி பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில், எதிர்பாராத வகையில் அவர் மரணமடைந்திருப்பது மாநில பாஜக நிர்வாகிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான பந்தர்கச் பகுதியில் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.