ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பன்றிக் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துகள் அரசு மருத்துவமனையில் உள்ளன: அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 நவம்பர் 2018, 10:50 am

DIN


சென்னை: காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சலை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் 70 பேர் காய்ச்சலுக்கும், 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் வந்தால் விரைந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. டெங்கு காய்ச்சல் வந்தால் பாரசிட்டமால் மருந்தோ அல்லது ஊசியோ போட்டுக் கொள்ளக் கூடாது. காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.