தெலங்கானா: தேர்தல் பிரசார ஜுரத்தால் விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்

தெலங்கானாவில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு தீபாவளி என்றால் அது தேர்தல் காலம்தான்.
தெலங்கானா: தேர்தல் பிரசார ஜுரத்தால் விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்
Updated on
1 min read


கம்மம்: தெலங்கானாவில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு தீபாவளி என்றால் அது தேர்தல் காலம்தான்.

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று கோஷம் எழுப்ப கூலி தொழிலாளர்களை பல்வேறு அரசியல் கட்சியினரும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.

உணவு, பணம் என கூலித் தொழிலாளர்களுக்கு தேர்தல் காலம்தான் உண்மையிலேயே தீபாவளித் திருவிழாக்காலம்.

ஆனால், கூலித் தொழிலாளர்கள் எல்லாம் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று விடுவதால் விவசாய வேலைக்கும், கட்டடத் தொழிலுக்கும் ஆட்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

இது பற்றி கூலித் தொழிலாளி கூறுகையில், பிரசாரத்துக்குச் சென்றால் ஒருவருக்கு ரூ.500 கொடுக்கிறார்கள். அதுவும் சும்மா உட்கார்ந்திருக்க. கூலி வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் வேலை செய்தாலும் ரூ.300 தான் கூலி கிடைக்கும் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com