ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மத்தியபிரதேசத்தில் நாளை பேரவைத் தேர்தல்: ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 

News image
Updated On :27 நவம்பர் 2018, 1:20 pm

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 

மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 65,341 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவற்றில் 2 ஆயிரம் வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண் ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் செயல்படவுள்ளது. 

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மற்றும் வெவ்வேறு பகுதிகளில் 160 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 45 ஆயிரம் பெண் ஊழியர்கள் உட்பட 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 12 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

41,30,900 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,389 மூன்றாம் பாலினத்தவர் உட்பட  மொத்தம் 5,04,95,251 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் உட்பட 2,907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.