நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தோனேஷிய பேரழிவு: உதவிக்குச் செல்லும் இந்திய விமானப்படை

 இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு மீட்புப் பணிகளுக்கு இந்திய விமானப் படை சார்பில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படவுள்ளது. 

News image
Updated On :2 அக்டோபர் 2018, 9:29 am

DIN

இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. 

Story image

இப்பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 - ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Story image

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு மீட்புப் பணிகளுக்கு இந்திய விமானப் படை சார்பில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படவுள்ளது. இதில் சி-130ஜே மற்றும் சி-17 ஆகிய இரு விமானங்களில் 37 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் அனுப்பப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.