திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஜேஎன்யு மாணவர் நஜீப் காணாமல் போன விவகாரம்: வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

ஜேஎன்யு மாணவர் நஜீப் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2018, 2:39 am IST

ஜேஎன்யு மாணவர் நஜீப் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ள சிபிஐக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் நஜீப் அகமது மாயமான விவகாரத்தில் எந்தத் தடயமும் இதுவரை கிடைக்காததால் அந்த வழக்கை முடித்துக் கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. 
ஜேஎன்யு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நஜீப் அகஸ்மது, கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் திடீரென மாயமானார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்த சிலருடன் நஜீப் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னரே அவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை விசாரித்து வந்த போலீஸார், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து அதை சிபிஐ வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிபிஐ விசாரணையிலும் நஜீப் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக நஜீப்பின் தாய் தாக்கல் செய்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் சிபிஐ அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தது. இந்த வழக்கை முடித்துக் கொள்வது குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்க விரும்புகிறது என்றார். 
இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், ஜேஎன்யு மாணவர் நஜீப் காணாமல் போன விவகாரம் தொடர்பான வழக்கை முடித்துக் கொள்ள அனுமதியளித்தனர்.
நீதி கிடைக்கும் வரை...
நஜீப்பின் தாய ஃபாத்தீமா நஃபீஸ் கூறுகையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. சிபிஐயின் விசாரணை பாரபட்சமாகவும், எனது மகனை தாக்கியவர்களை காப்பாற்றும் விதமாகவும் இருந்தது. எனது மகனுக்கு நீதி கிடைக்கும் வரை நீதித்துறை மீதான நம்பிக்கை தொடரும் என்றார்.
தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் என். சாய் பாலாஜி கூறுகையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மனத்தளர்வைக் கொள்ளச் செய்கிறது. நஜீப் தொடர்பான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதி ஏற்றுள்ளோம். நரேந்திர மோடி ஆட்சியில் சிபிஐயும், தில்லி காவல்துறையும் வெறும் கைப்பாவையாக மாறிவிட்டன. இதனால்தான் நஜீப் தொடர்பான விசாரணையில் சமரசம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.