தாய்லாந்து நாட்டின் ரட்சதேவி பகுதியில், இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில், இந்தியர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
இது குறித்து, காவல் துறையினர் தெரிவித்ததாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ரட்சதேவி பகுதியில், இரு இளைஞர் பிரிவினர் ஒருவொருக்கொருவர் சுட்டுக்கொண்டதில், இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களுள் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்த காக்ரேஜ் தீரஜ்(42) என்பதும், மற்றொருவர் லாவோஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களுள் 2 பேர் இந்தியாவையும், 2 பேர் தாய்லாந்தையும், ஒருவர் லாவோஸ் நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
20 நபர்களைக் கொண்ட அந்த கும்பல், அங்குள்ள ஸ்நூக்கர் விளையாட்டு கிளப்பிலிருந்து வெளியே வந்ததாகவும், அவர்கள் கட்டைகள், கத்தி ஆகியவற்றை வைத்துத் தாக்கிக்கொண்டதாகவும், பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாகவும் தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
தாய்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருந்த இந்தியக் குழுவினர், அந்தப் பகுதியிலுள்ள இந்திய உணவகத்தில் உணவருந்திவிட்டு, தங்களுடையே பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த போது, இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








