நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை  

உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிராக அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :9 அக்டோபர் 2018, 3:15 pm IST

லக்னௌ: உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிராக அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் ரீடா பகுகுண ஜோஷி. முன்பு காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவர் கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்த போது,  தடையை மீறி லக்னௌவில் பொதுக் கூட்டம் நடத்தியதுடன், பின்னர் சட்டசபையை நோக்கி பேரணியும் நடத்தினார். இதன் காரணமாக காவல்துறையினருடன் தகராறு ஏற்பட்டது. 

அப்போது தொடரப்பட்ட வழக்கில்தான் அவருக்கு  அலஹாபாத் சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது. வரும் 31-ஆம் தேதியன்று  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.   

நாடெங்கும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குக்களை  விசாரிக்க என்று தனியாக மத்திய அரசு 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை  உருவாகியுள்ளது. அவற்றில் அலஹாபாத் சிறப்பு நீதிமன்றமம் ஒன்று. 

ரீடா பகுகுண ஜோஷிக்கு எதிரான கிரிமினல் வழக்கு  தொடர்ந்து அங்கு நடைபெற்று வந்த நிலையில், பலமுறை ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டு வந்த நிலையில், அவர் ஆஜராகாத  காரணத்தினால், தற்போது அவருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.