புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தெர்பானி என்ற இடத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பேரை இந்திய ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது.
பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் உடல்களைப் பெற்றுச் செல்லுமாறு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய ராணுவம் கூறுவது என்னவென்றால், சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ வீரர் என்றும், பயங்கரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்ற மற்றொருவரும் அடங்குவர் என்று கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி!

ஏப். 16-ல் தவெக முழு தேர்தல் அறிக்கை: விஜய்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்குத் திரும்புவாரா ருதுராஜ்?

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


