நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

முன்னாள் முதல்வர் மீதான புகார்: காங்கிரஸ் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சி

Updated On :22 அக்டோபர் 2018, 8:16 pm


காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சி பதிலளிக்க வேண்டுமென பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்களான உம்மன் சாண்டி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம் திட்டத்தினை ராகுல் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
முதலில், தன் கட்சிக்காரர்கள் மீதுள்ள குறைகளுக்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில், பாலின விகிதத்தை அதிகரிக்க உதவியுள்ள திட்டத்தை விமர்சிப்பதை ராகுல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சூரிய மின்தகடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சரிதா நாயர் அளித்துள்ள பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.