புது தில்லி: தில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் துப்பாக்கியால் மிரட்டி தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், சரணடைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் மகனுக்கு நீதிமன்றத் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்தவா் ராகேஷ் பாண்டே. இவரது மகன் ஆஷிஷ் பாண்டே. இவா் தில்லி ஆா்.கே. புரத்தில் உள்ள ஹயாத் ரீஜென்ஸி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 14-ஆம் தேதியன்று ஒருவரை துப்பாக்கியால் மிரட்டி, தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் மறுநாள் வைரலாகப் பரவியது. போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆஷிஷ் பாண்டே தில்லி நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதியன்று சரணடைந்தார்.
ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் அவருக்கு 19-ஆம் தேதியன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை வரும் 22-ம் தேதிவரை போலீஸ் காவலில் மட்டும் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆஷிஷ் பாண்டேவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாட்டியாலா நீதிமன்றத்தில் திங்களன்று ஆஜர் படுத்தப்பட்ட ஆஷிஷ் பாண்டேவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றத் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம் ஆஷிஷ் தரப்பில் ஜாமீன் மனு எதுவும் இன்று தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடக்ககூடாது: ப.சிதம்பரம்

இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


