ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

செல்ஃபி மோகம் யாரை விட்டது.. மகாராஷ்டிர முதல்வரின் மனைவி செய்ததைப் பாருங்கள்

பாதுகாப்புத் தடைகளை மீறி, கப்பலின் நுனிப் பகுதியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவியின் விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 11:10 am


பாதுகாப்புத் தடைகளை மீறி, கப்பலின் நுனிப் பகுதியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவியின் விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு பயணிகள் கப்பலான ஆங்ரியாவில், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிய அம்ருதா பட்னவிஸ், கப்பலின் நுனிப் பகுதிக்குச் சென்று அமர்ந்து கொண்டு பல திசைகளில் செல்ஃபி எடுத்துத் தள்ளினார்.

இதில், அவருக்கு எந்த பதற்றமும் ஏற்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.

அவரை அதட்டி உள்ளே வரச் சொல்லவும் முடியாமல், கப்பலின் நுனிப் பகுதிக்குச் செல்லவும் முடியாமல் அவர்கள் திணறிய விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மாநில முதல்வரின் மனைவியே இவ்வாறு செல்ஃபி மோகத்தில் பாதுகாப்புத் தடைகளை உடைத்தெறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.