புது தில்லி: இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியளித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்களான பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் எடுத்த முடிவில் தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படியானதே என்றும் இந்த வழக்கில் முன்றாவது நீதிபதியாகி நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் இது இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பதினெட்டு எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. இதன்மூலம் பதினெட்டு தொகுதிகள் காலியாகி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக இவ்வாறு தொகுதிகள் காலியாக இருப்பது அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விதி.
இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. யாரும் மேல்முறையீடு செய்யவில்லை என்று தெரிய வந்து, இதுதான் இறுதித் தீர்ப்பு என்றால் 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

நீட் போராட்ட மாணவா்கள் மீதான வழக்குகளைக் கைவிடலாம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சாயல்குடியில் 275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



