புது தில்லி: தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் 94 எம்.பிக்கள் இன்னும் தங்களது சொத்துக் கணக்கினை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
இந்நிலையில் சமூக ஆர்வலரான ரச்சனா கல்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு விதிமுறைகளின் படி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் எத்தனை பேர் இன்னும் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.
அவரது கேள்விக்கு, நாடாளுமன்ற மக்களவைச் செயலாளர் அளித்துள்ள பதில்பின்வருமாறு:
மக்களவையில் உள்ள மொத்த எம்.பி.க்களில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இன்னும் 61 எம்.பி.க்கள் இன்னும் தங்களின் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை, இதில் 4 எம்.பி.க்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
அதேபோல மாநிலங்களவையில் 29 எம்.பி.க்கள் இன்னும் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதில் தலா 6 எம்.பி.க்கள் , பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஏஐடிசி, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த தலா 3 எம்.பி.க்கள், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 2 எம்.பி.க்கள் ஆகியோர் சொத்துக்கணக்கு தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு மக்களவைச் செயலாளர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!

தெப்போற்சவம் முதல் கும்பாபிஷேகம் வரை.. எந்த கோயிலில் என்ன விசேஷம்?

குழந்தைப்பேறு அருளும் இறைவன்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


