8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கொசுத் தொல்லை புகார்: ராஞ்சி மருத்துவமனையில் வேறு அறைக்கு லாலு மாற்றம்

கொசுத் தொல்லை தொடர்பாக புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை பணம் கொடுத்து சிகிச்சை பெறுவோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு ராஞ்சி

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


கொசுத் தொல்லை தொடர்பாக புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை பணம் கொடுத்து சிகிச்சை பெறுவோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு ராஞ்சி மருத்துவமனை மாற்றியுள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்வி மருத்துவமனையில் லாலு சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜேந்திரா மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்ட அறையில் கொசுத் தொல்லை இருப்பதாகவும், சுகாதார குறைபாடு நிலவுவதாகவும் லாலு புகார் தெரிவித்தார். இந்த காரணங்களை சுட்டிக்காட்டி, வேறு அறைக்கு மாற்றக்கோரி, ராஞ்சி மருத்துவமனை நிர்வாகத்திடம் லாலு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதை பரிசீலித்த மருத்துவமனை நிர்வாகம், லாலு பிரசாத்தை பணம் கொடுத்து சிகிச்சை பெறுவோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு புதன்கிழமை இரவு மாற்றியது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே. ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், சிறைத்துறை கண்காணிப்பாளரின் அனுமதியின்பேரில் லாலு பிரசாத் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த அறைக்கு நாள் வாடகையாக லாலு பிரசாத் ரூ.1,000 செலுத்த வேண்டும்' என்றார்.
லாலு பிரசாத் யாதவை வேறு அறைக்கு மாற்றியதற்காக, ராஞ்சி மருத்துவமனை நிர்வாகத்துக்கு அவரது ஆதரவாளர்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.