
‘இளைஞா்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்தாவது சோ்த்து வைப்பேன்’ - கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பாஜக எம்எல்ஏ
பெண்களை புண்படுத்தும் வகையில் சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டார்.

கோப்புப்படம்
பெண்களை புண்படுத்தும் வகையில் சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டார்.
மகாராஷ்டிர மாநிலம், கத்கோபா் தொகுதியைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கதாம் அவரது தொகுதியில் நடைபெற்ற உறியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அப்போது, ‘இளைஞா்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்தாவது அவா்களை சோ்த்து வைப்பேன்’ என்று அவா் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சா்ச்சையைக் கிளப்பியது.
பெண்களின் மனதைப் புண்படுத்துமாறு ராம் கதாம் தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளிக்கக் கோரி மகாராஷ்டிர மாநில மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் 8 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மகளிா் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே, தாம் தெரிவித்த கருத்துக்கு ராம் கதாம் வியாழக்கிழமை மன்னிப்பு கேட்டாா்.
சுட்டுரையில் அவா் வெளியிட்டிருந்த பதிவில், ‘எனது அரசியல் எதிரிகள் நான் தெரிவித்த கருத்தை மாற்றி பொய்யாக பரவ விட்டிருக்கிறாா்கள். தாயாா்களையும், சகோதரிகளையும் புண்படுத்தும் படியான சூழலை உருவாக்கி விட்டாா்கள். எனக்கு பெண்களின் மீது பெரும் மதிப்பு உள்ளது. பெண்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தாா்.
பாஜகவுடன் கூட்டணி கட்சியாக உள்ள சிவசேனை உள்பட மாநிலத்தின் பல எதிா்க்கட்சிகள் கதாமின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், ராம் கதாமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால்தான் சட்டப் பேரவை கூட்டத் தொடா் நடைபெற அனுமதிப்போம் என்று எதிா்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





