பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: இந்தியா, பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

விண்வெளித் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இவ்விரு 

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

விண்வெளித் துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இவ்விரு நாடுகளும் வியாழக்கிழமை கையெழுத்திட்டன.
ககன்யான்' திட்டத்தின் கீழ், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தத் திட்டத்தின்படி, விண்வெளிக்கு 3 பேரை அனுப்பி வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) நிறைவேற்றுமானால், ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் 4-ஆவதாக இந்தியா இடம்பெறும்.
இந்நிலையில், ககன்யான்' திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கு இஸ்ரோவும், பிரான்ஸின் தேசிய விண்வெளி ஆய்வு மையமும் முடிவு செய்துள்ளன. பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து, பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் ஜீன் ஈவ்ஸ் லி கால் கூறியதாவது:
இந்த ஒப்பந்தப்படி, பிரான்ஸில் விண்வெளி வீரர்களுக்கான மருத்துவமனையை இஸ்ரோ அமைத்துக் கொள்ளும். இதுதவிர, இரு நாடுகளின் மருத்துவர்கள் இணைந்து செயல்படுவார்கள். அவர்கள், விண்வெளி வீரர்களின் உடல்நிலைக் கண்காணிப்பது, உயிர் காக்கும் கருவிகளை அளிப்பது, கதிர்வீச்சில் இருந்து வீரர்களை பாதுகாப்பது, விண்வெளி கழிவுகளில் இருந்து பாதுகாப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வர் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.