தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஜம்மு-காஷ்மீரில் மோதல்: 5 பயங்கரவாதிகள் கொலை; 12 வீரர்கள் படுகாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் வியாழக்கிழமை கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் காவல்துறையினர்.

Published On :


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் மூவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். 
இதேபோல், பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்திவிட்டு, வனப்பகுதிக்குள் தப்பியோடினர். இந்தத் தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.
தப்பியோடிய பயங்கரவாதிகளை கண்டறிவதற்காக, ஆளில்லா கண்காணிப்பு குட்டி விமானம், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் துணையுடன் தேடுதல் பணி நடைபெற்றது.
இதற்கிடையே, புதன்கிழமை இரவு பயங்கரவாதிகள் தனது வீட்டுக்கு வந்து, உணவருந்திவிட்டு, மாற்றுத் துணிகளையும் பெற்றுக் கொண்டு சென்றதாக கிராமவாசி ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. 
மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கக்ரியால் என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை அவர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்தச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், 20 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், காவல்துறையைச் சேர்ந்த ஐவருக்கும், ராணுவ வீரர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
பாரமுல்லா மோதல்: இதனிடையே, பாரமுல்லா மாவட்டம், சோபோர் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து இரு தரப்பிலும் மோதல் மூண்டது. இறுதியில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களும், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக தற்போது கொல்லப்பட்டுள்ள பயங்கரவாதிகள் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு படையினர் 5 பேர் உயிரிழப்பதற்கு காரணமான வெடிகுண்டு தாக்குதலை நடத்தியவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.