உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

தில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அபார வெற்றி

தில்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியுள்ளது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஏபிவிபி வேட்பாளர்கள்

Published On :

தில்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலர் ஆகிய பதவிகளை அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கைப்பற்றியுள்ளது. செயலாளர் பதவியை என்எஸ்யுஐ கைப்பற்றியது.
ஏபிவிபியின் அன்கிவ் பசோயா 1,744 வாக்கு வித்தியாசத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் சன்னி சில்லரை தோற்கடித்து தலைவர் பதவியை கைப்பற்றினார். 
ஏபிவிபி வேட்பாளர் சக்தி சிங் 7,673 வாக்கு வித்தியாசத்தில் என்எஸ்யுஐ வேட்பாளர் லீனாவை தோற்கடித்து துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார்.
இணை செயலர் பதவியை ஏபிவிபி வேட்பாளர் ஜோதி கைப்பற்றினார். என்எஸ்யுஐ வேட்டாளர் ஆகாஷ் சௌதரி செயலர் பதவியை கைப்பற்றினார்.
இந்தத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டிய ஆகாஷ் சௌதரி, 7 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் காணவில்லை என்றார் அவர்.
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முக்கிய நான்கு பதவிகளுக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 23 வேட்டாளர்கள் போட்டியிட்டனர். 
மொத்தம் 1.35 லட்சம் மாணவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற இந்தத் தேர்தலில், 44.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் எண்ணப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து இரு தடவைகள் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் வாக்கு எண்ணிக்கை மாலையில் தொடங்கியது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மீண்டும் புதிதாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) கோரிக்கை வைத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். 
இது தொடர்பாக, என்எஸ்யுஐ நிர்வாகி ராக்கி துஷீட் கூறுகையில், மத்திய அரசு தங்களுக்கு சாதகமான வகையில் தில்லி பல்கலைக்கழகத் தேர்தல் முடிவுகளை மாற்றியெழுத முயற்சிக்கிறது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட வாய்ப்பே இல்லை. உண்மையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. மீண்டும் புதிதாகத் தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி' என்றார்.
தோல்வி பயம்: ஆனால், தோல்வி பயத்தில் என்எஸ்யுஐ இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கூறியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு மட்டுமே ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஏபிவிபி முன்னிலையில் உள்ளதால், புதிதாகத் தேர்தலை நடத்துமாறு என்எஸ்யுஐ கோரிக்கை வைக்கிறது' என்றனர்.

தேர்தல் ஆணையத்திடம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறவில்லை
தில்லி பல்கலைக்கழக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது அல்ல என்று தில்லி தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தில் பதிவான வாக்குகள் அடிங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுதொடர்பாக தில்லி தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம்தான் வழங்கியது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தில்லி பல்கலைக்கழகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. 
மாநில தேர்தல் ஆணையத்திடம் இதுபோன்ற வாக்குப் பதிவு இயந்திரங்களே இல்லை. இந்த இயந்திரங்களை தில்லி பல்கலைக்கழகம் தனியாக வாடகைக்கு வாங்கி உள்ளது. 
இதுதொடர்பாக விளக்கமளிக்க தில்லி பல்கலைக்கழகத்தில் மூத்த அதிகாரிகள் தற்போது யாரும் இல்லை என்பதால் இந்த விவகாரம் குறித்து பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்தலை நடத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி வலியுறுத்தல்
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தேர்தலை புதிதாக மீண்டும் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் கூறுகையில், தில்லி பல்கலைக் கழகத் தேர்தலில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது. மறு தேர்தலே தீர்வு' என்றார். 
ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடியால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து நிகழ்ந்துள்ளது' என்றார். 
இந்நிலையில், மாணவர் சங்கத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அடிப்படை ஆதாரமில்லாமல் புகார் கூறுவதாக பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக தோல்வி பயத்தால் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் இருந்து அவர்களின் தோல்வி பயம் வெளிப்படுகிறது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.