ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பேராயருக்கு எதிரான விசாரணையில் திருப்தி: கேரள உயர் நீதிமன்றம்

கேரள மாநிலத்தில் பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரி தெரிவித்த பாலியல் வன்கொடுமை புகாரில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணை திருப்தி

Published On :

கேரள மாநிலத்தில் பேராயருக்கு எதிராக கன்னியாஸ்திரி தெரிவித்த பாலியல் வன்கொடுமை புகாரில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணை திருப்தி அளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தனது புகார் குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக, கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பிரான்கோ முல்லகல், கடந்த 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பலமுறை தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக காவல்துறை முறையான விசாரணை நடத்த மறுப்பதாகக் கூறி பல கன்னியாஸ்திரிகள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் 3 பேர் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு பாதுகாப்பு அளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
அதே சமயம், விசாரணைக்காக பேராயர், வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
அப்போது, பேராயருக்கு எதிரான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நீதிபதிகள் பதில் அளிக்கையில், அவசர கதியில் விசாரணை நடத்துவது என்பது, குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் தண்டனையின்றி தப்புவதற்கு வழிவகுப்பதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் காவல்துறை இதுவரை நடத்திய விசாரணை திருப்திகரமாக உள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக, சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி அமைதி காத்ததைப் போல, இந்த மூன்று மனுதாரர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும், பேராயரிடம் காவல்துறை விசாரணைக் குழு, வரும் 19-ஆம் தேதி விசாரணை நடத்திய பின்னர், இந்த மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை, வரும் 24-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.