டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிப்பு

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும், வரும் 2022}ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:24 pm IST


சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழி நடத்துவதற்காகவும், வரும் 2022- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும், பிரதமர் மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக, உலக அளவில் 6 பேர் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண துணிச்சலாகவும், புதுமையாகவும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டதற்காக, அவர்களுக்கு கெüரவம் அளிக்கப்படுகிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உள்ளிட்ட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு "சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, உலகிலேயே முதல் முறையாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, முற்றிலும் சூரியமிசக்தி மின்சாரத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதற்காக, கொச்சி விமான நிலையத்துக்கு விருது வழங்கப்படவுள்ளது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.