வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-45

இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காகவும், மற்றும் ராணுவ உளவு
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-45


இந்தியாவின் "எமிசாட்' உள்பட 29 செயற்கைக்கோள்களைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் இன்று திங்கள்கிழமை (ஏப் 1) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நிகழாண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 2வது ராக்கெட் இதுவாகும்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் இன்று காலை 9.30 மணியளவில் பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அவை அனைத்தும் இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் ஓவ்வொன்றாக நிலை நிறுத்தப்பட்டது. 

இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட எமிசாட் செயற்கைக்கோளானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயன்பாட்டுக்காகவும், மற்றும் ராணுவ உளவு பயன்பாட்டுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் மொத்த எடை 436 கிலோ எடைக்கொண்டது. அதன் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளைக் கண்காணிக்க முடியும்.

பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் 753 கிலோ மீட்டர் தொலைவில் எமிசாட் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட து. வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் 505 - 503 கிலோ மீட்டர் தொலைவில் ஒவ்வொன்றாக நிலைநிறுத்தப்பட்டது. 

உலகிலேயே இதற்கான 27 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.27 மணிக்குத் தொடங்கியது. நிகழாண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 2-ஆவது ராக்கெட் இது என்பதும், அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிதுவேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி - சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com