இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்குக்கு எதிராக பிரபல நடிகரின் மனைவி போட்டி    

உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்குக்கு எதிராக பிரபல நடிகரின் மனைவி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 10:42 am

IANS

லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்குக்கு எதிராக பிரபல நடிகரின் மனைவி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஓருவராவார். நாடாளுமன்றத் தேர்தலில் இவர் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்குக்கு எதிராக பிரபல நடிகரின் மனைவி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவில் இருந்து எம்.பியாகத் தேர்ந்துடுக்கப்பட்டவரும் தற்போது அக்கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியுள்ளவருமான நடிகர் சத்ருகன் சின்ஹா, சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அத்துடன் அவர் வரும் 6-ஆம் தேதியன்று காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக அவர் இணைய உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.      

தற்போது அவரது மனைவியான பூனம் சின்ஹா உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்குக்கு எதிராக போட்டியிட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Story image

சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக அவர் போட்டியிட உள்ளார் என்றும், பகுஜன் சமாஜ் கட்சியும் பூனம் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது.

ஏற்கனவே உ.பியில் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்துள்ளது. அதேபோல இந்த கூட்டணிக்கு எதிராக 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்று காங்கிரசும் அறிவித்துள்ளது.

அந்த 7 தொகுதிகளில் ராஜ்நாத்தின் லக்னௌவும் ஒன்று என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல முன்னரே நடைபெற்றுள்ள பேச்சுவார்தையின் படி பிகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.